ரம்ஜான் அன்று அறிவிக்கப்பட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளின் தேதி மாற்றம் குறித்து பரிசீலிக்கப்படும்! ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் பண்டிகை அன்று நடைபெற உள்ள  சிபிஎஸ்இ தேர்வுகளின் தேதியை மாற்றம் செய்வது குறித்து  பரிசீலிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்  தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,  மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு பிப்ரவரி மாதம் 6ந்தேதி கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்தில், ரமலான் பண்டிகைக்க தமிழகஅரசும், மத்தியஅரசும் விடுமுறைகள் அறிவித்துள்ளன. அன்றையதினம் சிபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதத்துக்கு மத்தியஅமைச்சர் பதில் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ரம்ஜான் அன்று நடைபெற உள்ள தேர்வு தேதியை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.