சூரத்:

ஸ்லாமியர்களைப் பொருத்தவரை ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் நோன்பு  மிகவும் முக்கியமானதாகும். இதை மிக புனிதமான ஒன்ராக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் நான்காம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ரம்ஜான் நோன்பு குறித்து இழிவாக கூறப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் 13வது பக்கத்தில் இத்கா எனும் கதையில், “இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் நோன்பு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் தொற்றுநோய்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது இந்த விவகாரம் குஜராத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.