டில்லி

னது சாபத்தால் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதாக சாத்வி பிரக்ஞா கூறியதற்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவல் துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே மும்பையில் 2008 ஆம் வருடம் நடந்த 26/11 தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.   அதே வருடம் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளரான சாத்வி பிரக்ஞா தாகுர் காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே வால் கைது செய்யப்பட்டார்.     ஜாமினில் வெளிவந்துள்ள சாத்வி யை பாஜக தனது போபால் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது.

சாத்வி பிரக்ஞா தாகுர் தன்னை ஹேமந்த் கர்கரே கொடுமைப் படுத்தியதால் தாம் அவருக்கு அளித்த சாபத்தினல் அவர் தீவிரவாதிகளால்  கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.   இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்தது.   அதை ஒட்டி சாத்வி வருத்தம் தெரிவித்தார்.  தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

இது குறித்து மத்திய் அமைச்சர் ராமதாஸ் அதவாலே, “மக்களை காக்க தீவிரவாதிகளுடன் நடந்த போராட்டத்தில் கர்கரே தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.  அவரைப் பற்றி தவறாக பேசிய சாத்விக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.  எது சரி மற்றும் எது தவறு என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.    சாத்வி எனது கட்சியில் இருந்திருந்தால் நான் அவருக்கு தேர்தல் வாய்ப்பு அளித்திருக்க மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.