தமிழ் நாடு அரசுத்தேர்வுகள் ஆங்கிலத்திலா?: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வை ஆங்கிலத்தில் நடத்துவதற்கு பா ம க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“தமிழ் வினாத்தாள் தயாரிக்க பேராசிரியர்கள் இல்லாததால் இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்.2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் நடத்த முடியாதுட என்று – தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“எந்த வினாத்தாளும் ஆங்கிலத்திற்கு தனியாகவும், தமிழுக்குத் தனியாகவும் தயாரிக்கப்படுவதில்லை. ஏதேனும் ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு, மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தான் வழக்கமாகும். ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், அதை தமிழில் மொழி பெயர்ப்பது ஒன்றும் கடினமல்ல.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமே தமிழில் தேர்வை நடத்துகிறது. டிஎன்பிஎஸ்சி செகரெட்ரி நந்தகுமார் கூட தமிழில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆனவர்தான். அப்படி இருக்கும் போது தமிழில் வினாத்தாளை டிஎன்பிஎஸ்சி தயாரிக்க முடியாதது அவமானம் ஆகும். தமிழில் வினாத்தாள்களை தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம்

அண்மையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம், தொழில்நுட்பப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் பணிக்கான போட்டித்தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்தியுள்ளது.
கைரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சியும் தேர்வுகளை திட்டமிட்டு ஆங்கில மயமாக்குகிறது.

இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி அடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி, அனைத்து போட்டித் தேர்வர்களையும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்புவது தான் அந்த சதியாகும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.