சமஸ்கிருதத்தைக் கற்பிக்க முஸ்லீம் பேராசிரியரை நியமித்த ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி!
கர்நாடகா: பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க ஒரு முஸ்லீம் பேராசியரான ரம்ஜான் கானை நியமித்ததோடு, உதவி பேராசிரியராக பழங்குடி இனத்தைச் சார்ந்த கணேஷ் துதூ என்பவரையும் நியமித்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
வாரணாசி இந்து பல்கலைக்கழக மாணவர்கள், சமஸ்கிருதத்தில் பி.எச்.டி பெற்றிருந்த பேராசிரியர் ஃபிரோஸ் கானிடம் அப்பாடத்தைக் கற்றுக்கொள்ள மறுத்திருக்கும் நேரத்தில், இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திரின் இந்த நியமனம் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்நிறுவனத்தை ஒரு முதன்மை கல்லூரியாக அறிவித்திருந்தது இந்நேரத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
வங்காளத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஷேக் சபீர் அலி, இப்போது பராசத்தில் உள்ள மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகத்தில் இந்த பாடத்தைக் கற்பிக்கிறார்.
ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் என்பது இயற்கையில் பன்மை மற்றும் நடைமுறையில் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும். சுவாமி விவேகானந்தர் எப்போதும் உண்மையான உலகளாவிய மதத்தைப் பற்றிப் பேசியுள்ளார். இந்த நியமனம் நிச்சயமாக அந்த சகிப்புத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.