ரவுண்ட்ஸ்பாய் கேள்வி:

ருணாநிதி அல்லது ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் ஆண்டாள் விவகாரம் எந்த திசையில் போயிருக்கும்?

ராமண்ணா பதில்:

ண்டாளுக்கு அவப்பெயர் என்று ஒரு கூட்டம் கிளம்பியவுடனேயே கருணாநிதி பயந்திருப்பார். தனது ஆட்சியை வீழ்த்த, மத்திய பாஜக அரசு செய்யும் திட்டம்தானோ என்று தனது ராஜதந்திர சிந்தனையை தட்டிவிட்டிருப்பார். வைரமுத்துவுக்கு  அவர் சமிக்ஞை (சிக்னல்) காட்ட…   வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று, ஆண்டாள் சந்நிதி முன்பு மன்னிப்பு கேட்டிருப்பார்.

“தமிழினத்தலைவர் டாக்டர்  கலைஞர் ஆட்சியை, பார்ப்பனீய மத்திய பாஜக அரசு கலைக்க முயன்றது. அதை ராஜதந்திரத்துடன் தலைவர் தடுத்துவிட்டார்” என்று கருணாநிதி ஆதரவாளர்கள் பேசி, எழுதி ஆர்ப்பரித்திருப்பார்கள்.

“மன்னிப்புகேட்ட மகாகவியே” என்று வைரமுத்துவை  பாராட்டி நான்கு கூட்டங்களும், “மன்னிப்பு கேட்க வைத்த திராவிட சாணக்கியரே” என்று கருணாநிதியையும் புகழந்து நானூற்றி நாற்பத்தி நான்கு கூட்டங்கள் நடந்திருக்கும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால், ஆண்டாளுக்காக இத்தனை ஆர்ப்பாட்டத்துடன் எவரும் குரல் கொடுத்திருக்கமாட்டார்கள். ஒரு சிலர் முணங்கியிருப்பார்கள்.  வைரமுத்துவும் உடனே வருத்தம் தெரிவித்திருப்பார். இது தினமணியின் ஏழாம் பக்கத்தில் பத்துவரி செய்தியாக வெளியாகியிருக்கும். அத்தோடு அந்த விவகாரம் மறக்கப்பட்டிருக்கும்.