டில்லி,

.பி.யில் பழமையான பாபர் மசூதி 1992-ம்  ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் மூண்டது.

இந்நிலையில், உபியில் ராமர்கோவில் கண்டிப்பாக கட்டப்படும், அதை யாரும் தடுக்க முடியாது என்று மத்தியஅமைச்சர் உமாபாரதி பகிரங்கமாக கூறியுள்ளார்.

பாரதியஜனதா மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரையின் விளைவாகவும், ஜோஷி, உமாபாரதி போன்ற தலைவர்களின் வெளிப்படையான பேச்சு காரணமாகவும் பாபர் மசூதி இந்துத்வா வெறியர்களால் 1992ம் ஆண்டு  டிசம்பர் 6ந்தேதி  இடிக்கப்பட்டது.

அதையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாக பாரதியஜனதாவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின்போது, வழக்கில் இருந்து அத்வானி, ஜோஷி,  உமாபாரதி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

அதை எதிர்த்து சிபிஐ அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தது. ஆனால், அலகாபாத் ஐகோர்ட்டுக்கும் அவர்கள்மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

இதுகுறித்து சிபிஐ உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன்பேரில் உச்சநீதி மன்றம் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் உள்பட 13 பேர் மீதுள்ள புகார் குறித்து மீண்டும் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உமாபாரதி வெளியேற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியதாவது,

“எங்கள் மீதான குற்றச்சாட்டு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ராமர், அயோத்தி மற்றும் கங்கைக்காக இந்திரலோக பதவியாக இருந்தாலும் அதை விட்டு விலக நான்  தயாராக இருக்கும் போது,  அமைச்சர் பதவி என்பது பெரிய விஷயமில்லை”, என்று கூறினார்.

சம்பவம் நடைபெற்ற 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி தான் அயோத்தியில் தான் இருந்தேன்.  ஆனால், சதிக்குற்றச்சாட்டுக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

மேலும், பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆசை தமக்கு இல்லை என்றும், தமது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பார் என்றும் அவர் கூறினார்.

உச்சநீதி மன்ற அறிவிப்பை தொடர்ந்து என்னை ராஜினாமா செய்ய காங்கிரஸ் கோருகிறது.

` என்னுடைய ராஜினாமாவை கோர காங்கிரசுக்கு உரிமை இல்லை. ஏனெனில் அவர்கள் தான் நாட்டில் அவசரகால நிலையை கொண்டுவந்தார்கள், லட்சக்கணக்கான மக்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்தார்கள். 1984 ல் பத்தாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர், அந்த சமயத்தில் ராஜீவ்காந்தியின் வீட்டில் இருந்ததால், சோனியா காந்தி, அதற்கு சதித்திட்டம் தீட்டியதாக சொல்லலாமா? “ , என்றும் கேள்வி எழுப்பினார்.

தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள  இந்தத் தீர்ப்புக்கு பிறகு, இனி அற்புதமான ராமர் ஆலயம் கட்டுவதற்கான நேரம்  வந்துவிட்டது. அயோத்தியைப் பொறுத்தவரை, நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் தான் சர்ச்சை இருக்கிறது, இது, நீதிமன்றத்திலும் தீர்க்கப்படலாம், நீதிமன்றத்திற்கு வெளியிலும் தீர்த்துக் கொள்ளலாம்  என்றார்.

இதறக்க,  ராமருக்கும், அனுமாருக்கும் நன்றி செலுத்துவதற்காக அயோத்தி செல்லவிருப்பதாகவும், அயோத்தியல் “ராமர் ஆலயம் கண்டிப்பாக கட்டப்படும், யாராலும் அதை தடுக்கமுடியாது

இவ்வாறு அவர் கூறினார்.