ராமர்பிள்ளையின் மூலிகை பெட்ரோல் மோசடி!: அதிர்ச்சி வீடியோ!

மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கூறி வருகிறார் ராமர்பிள்ளை. ஐ.ஐ.டி. முதலிய நிறுவனங்களில் தான் ஆய்வு செய்து நிரூபித்ததாகவும்,  ஆனால் அவர்கள் ஏற்கவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகிறார். இதன் பின்னால் பன்னாட்டு முதலாளிகள் சதி செய்கிறார்கள் என்றும் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், “எல்.எம்.இ.எஸ். அகடமி” ராமர்பிள்ளையை அணுகி மூலிகை பெட்ரோல் என்பதை நிரூபிக்கக் கோரியிருக்கிறது. அவரும் வந்திருக்கிறார். மூலிகை பெட்ரோலை (!) செய்து காண்பித்திருக்கிறார். ஆனால் அதில்  அதிர்ச்சிகரமான விசயம் வெளிப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோ கீழே.

இதன் பிறகு ராமர்பிள்ளையை  patrikai.com இதழ் சார்பாக தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்தோம். இறுதியில் நமது அழைப்பை ஏற்ற அவர், சிறிது நேரம் கழித்துப் பேசுவதாக கூறினார். ஆனால் பிறகு நாம் தொடர்ந்து அவருக்கு அலைபேசியபோதும் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கும் தகவல் அனுப்பி காத்திருக்கிறோம்.

இந்த வீடியோ குறித்து அவர் விளக்கம் அளித்தால் patrikai.com இதழில் வெளியிட தயாராக இருக்கிறோம்.

அந்த வீடியோ:

 

Leave a Reply

Your email address will not be published.