ராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாள்: அரசு சார்பில் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை

சென்னை:

ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று 102-வது பிறந்தநாளை யொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், சிவி. சண்முகம், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கடநத 2018ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின் போது, மறைந்த சுதந்திர போராட்ட வீரர்  ராமசாமி படையாச்சியார் பிறந்த செப்.16ந்தேதி  அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும்  ராமசாமி படையாச்சியார்  உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப் படும் எனவும் முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 19ந்தேதி (2019ம் ஆண்டு) ராமசாமி படையாச்சி முழு உருவப் படத்தை சட்டப்பேரவை மண்டபத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். ராமசாமி படையாச்சியார் உருவப்படத்திற்கு கீழ் ‘வீரம்… தீரம்… தியாகம்’  என எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி, முதன்முதலாக  தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், சமூக பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.