‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , நடிகை ஆலியா பட் , பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கவுள்ளனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜய் தேவ்கன் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக RRR ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 27) ராம் சரண் பிறந்த நாள் என்பதால், இந்தப் படத்திலிருந்து அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ராம ராஜு என்ற பெயரில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் ராம் சரண். பீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜுனியர் என்.டி.ஆர்.

தற்போது இந்தப் படத்தின் ராம் சரண் லுக்கை போஸ்டராகவும் வெளியிட்டுள்ளது ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு. இந்த போஸ்டர் மற்றும் வீடியோ இரண்டிற்குமே இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.