மும்பை: இந்தியாவில் வாழும் அனைவருமே இந்துக்கள் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தை மறுத்துள்ளார் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.

இந்தியக் குடியரசு கட்சி(ஏ) இன் தலைவராக இருக்கும் ராம்தாஸ் அத்வாலே, மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதாவின் கூட்டணியில் உள்ளார். இவர் ராஜ்ய சபா உறுப்பினர்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய மறுத்துள்ள இவர், “இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்று சொல்வது சரியான விஷயமல்ல. இந்தியாவில் உள்ள அனைவரும் ஒருகாலத்தில் பெளத்தர்களாக இருந்த வரலாறு உண்டு.

தற்போயை நிலையில், இந்நாட்டில் பெளத்தர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் லிங்காயத்துக்கள் என பல நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். எனவே, அவர்களையெல்லாம் இந்துக்கள் என்று குறிப்பிடுவது தவறு” என்றுள்ளார்.

ஒரு குடிமகன், எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும்இ எந்த வழிபாட்டு முறையை மேற்கொண்டாலும், மத நம்பிக்கையே இல்லாமல் இருந்தாலும், அவர் ஒரு இந்துவாகத்தான் இருப்பார் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் மோசமான சித்தாந்தத்தை வெளிப்படுத்தியிருந்தார் அதன் தலைவர் மோகன் பகவத்.