தமிழில் டூயட் சதி லீலாவதி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரமேஷ் அரவிந்த், கன்னடத்தில் சில படங்களையும் டைரக்டு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘பிஸி’யாக இருந்த போது, சென்னையில் வசித்து வந்த ரமேஷ் அரவிந்த், இப்போது சொந்த ஊரான பெங்களூருவில் குடியேறி விட்டார்.

ரமேஷ் அரவிந்த் – அர்ச்சனா தம்பதியின் மகள் நிஹாரிகாவுக்கும், அக்‌ஷய் என்பவருக்கும் பெங்களூரில் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

ரமேஷ் அரவிந்த் வீட்டில் எளிமையாக நடந்த இந்த கல்யாணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கல்யாணத்தையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் மனைவி அர்ச்சனாவுடன், ரமேஷ் அரவிந்த் ‘டான்ஸ்’ ஆடி அமர்க்களப்படுத்தினார்.

சினிமா நண்பர்களுக்கு ஜனவரியில் மெகா விருந்து வைக்க திட்டமிட்டுள்ளார், ரமேஷ் அரவிந்த்.

– பா. பாரதி