‘பிக் பாஸ் 3’-ல் நான் பங்கேற்கவில்லை , அது வெறும் வதந்தி : ரமேஷ் திலக்

‘பிக் பாஸ் 3’-ல் பங்கேற்கவுள்ளார் என்று வெளியான செய்திக்கு, தனது ட்விட்டர் வீடியோ மூலமாக மறுப்பு தெரிவித்துள்ளார் ரமேஷ் திலக்

தற்போது ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சிக்கான பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளது விஜய் டிவி. இம்முறையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார். இன்று பங்கேற்பவர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வந்தது .

இதில் ரமேஷ் திலக் பங்கேற்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ‘சூது கவ்வும்’, ‘டிமாண்ட்டி காலனி’, ‘காக்கா முட்டை’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவர் இவர் .

இந்தச் செய்தி தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரமேஷ் திலக். அது வதந்தி தான். அந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி