Random image

இன்று 3வது நாள்: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு

ராமேஸ்வரம்:

டீசல் விலை உயர்வு,  இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்  கடந்த 3ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததல் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக அவர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை  மீண்டும் தமிழக மீனவர்களிடையே ஒப்படைக்க கோரியும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று 3வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் அவர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், அனைத்து கட்சியினருடன் இணைந்து வரும் 7ஆம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளனர்..