இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று ராமேஸ்வரம் வருகை?

ராமேஸ்வரம்:

லங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட  19 மீனவர்களும் இன்று ராமேஸ்வரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி கடந்த 31ந்தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது.  அதன்படி விடுவிக்கப்பட்ட 19 பேரும்,  யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  அவர்கள் இன்று ராமேஸ்வரம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சிய புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் ஓரிரு நாள்களில் விடுதலை செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.