ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது

ராமேஸ்வரம்:

லங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அரசால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கோரியும்,  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும்,  தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் 184 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இன்று முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 26ந்தேதி  நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rameswaram fishermen's indefinite strike began, ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ்
-=-