சீலிங் ஃபேன் கீழே விழுந்தது : ராம்ஜெத்மலானி  உயிர் தப்பினார்

மும்பை

புகழ் பெற்ற ராம்ஜெத்மலானியின் வீட்டுக் கூரையில் உள்ள சீலிங் ஃபேன் திடீரென கீழே விழும்போது அவர் அங்கு இல்லாததால் உயிர் தப்பினார்

புகழ் பெற்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி.  இவருடைய வீடு மும்பையில் நாரிமன் பாயிண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ளது.   இவருடைய படுக்கை அறையில் இரவு தூங்கிய ராம்ஜெத் மலானி விடியற்காலையில் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

அவர் வெளியே சென்றபின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த சீலிங் ஃபேன் திடீரென கீழே விழுந்தது.   அப்போது அறையில் இல்லாததால் அவர் உயிர் தப்பினார்.

அவர் மகன் மகேஷ் ”அதிருஷ்டவசமாக அந்த அறையில் யாருமில்லை.  வழக்கமாக அப்பா அந்த ஃபேனின் கீழ்தான் அமர்ந்திருப்பது வழக்கம்.  அவர் இருக்கும் போது விழுந்திருந்தால் நினைக்கவே பயமாக உள்ளது எனக் கூறியுள்ளார்