ராம்குமாரின்  இறுதி நிமிடங்கள்!  போலீஸ் எஃப். ஐ.ஆர். சொல்வது இதுதான்

சென்னை:

புழல் சிரையில் உயிரிழந்த ராம்குமாரின் இறுதி  நிமிடங்களை, சிறை அதிகாரி (ஜெயிலர்) புழல் காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார்.

சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார் என்ற இளைஞர். இவர், கடந்த 18 ஆம் தேதி மதியம் தனது அறை  வாசலில் உள்ள மின் ஒயரை பிடுங்கி வாயால் கடித்ததாகவும்,  மின்சாரம் பாய்ந்து அவர் இறந்ததாகவும் சிறைத்துறை அறிவித்தது.

download

இந்த மரணம் குறித்து புழல் சிறையில் அப்போது பணியில் இருந்த ஜெயிலர்  ஜெயராமன் புகார் அளிக்க.. புழல் சிறை  இன்ஸ்பெக்டர்  சிவபாலன் வழக்கு பதிவு செய்துள்ளார். பிரிவு 176(1எ)ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அந்த எஃப் .ஐ.ஆரில் ராம்குமாரின் இறுதி நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதில் சுவாதி வழக்கில் நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும் ராம்குமார் மருத்துவமனிக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். அவர் கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் சிறையில் அடைப்பட்டுள்ளார். சிறையில் டிஸ்பன்சரி அறை ( மன அழுத்தம் உள்ள சிறைவாசிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ள பிளாக்) யில் அடைக்கப்பட்டிருந்தார்.

மாலை சுமார் 4-30 மணி அளவில் தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கூறியதால் கதவை திறந்து விடப்பட்டது. அப்போது தண்ணீர் குடிக்க வெளியே வந்த ராம்குமார் திடீரென தண்ணீர் பானைக்கு மேலிருந்த சுவிட்ச் பாக்சை தன் கையால் ஓங்கி அடித்து உடைத்து அதிலிருந்த ஒயரை பிடுங்கி தனது பல்லால் கடித்துவிட்டார்.

ராம்குமார் கடித்ததாக  காவல்துறை சொல்லும் மின்சார ஒயர்
ராம்குமார் கடித்ததாக காவல்துறை சொல்லும் மின்சார ஒயர்

அப்போது சிறையில் பொறுப்பாக இருந்த முதல் நிலை காவலர் பேச்சிமுத்து தனது கையிலிருந்த லத்தியால் சிறைவாசியை காப்பாற்ற முயற்சித்தார். அந்த நேரத்தில் ராம்குமார் மயங்கி விழுந்தார்.  மருத்துவருக்கு தகவல் கொடுத்த பேச்சி முத்து,  மெயின் சுவிட்சை  அணைத்தார்.

பிறகு ராம்குமாரை சிறை மருத்துவர் நவின் குமரன் பரிசோதித்தார். பிறகு சிறையிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்ட ராம்குமார், பிறகு ராயபேட்டை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

 

எஃப்.ஐ.ஆர்.
எஃப்.ஐ.ஆர்.

அவருடன் உதவி சிறை அலுவலர் பிச்சாண்டி,  காவலர்கள் ராம்ராஜ், அருண்குமார், பேச்சிமுத்து புருஷோத்தமன் ஆகியோர் ஆம்புலன்சில் ராயபேட்டை  மருத்துவமனிக்கு 5-08 மணிக்கு கொண்டு சென்றார்கள்.   ஆனால் மருத்துவமனையில் ராம்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே ராம்குமார் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி முறைப்படி ராம்குமாரின் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டது” என்று அந்த எஃப் .ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி