சென்னை:
ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில், வழக்கு விசாரணையை 3வது நீதிபதிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் மற்றும் ஒரு நீதிபதியின் கருத்தை கேட்க வேண்டியுள்ளது. எனவே, 3வது நீதிபதியின் கருத்தை கேட்கும் வரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1ramkumar-2-960x400
நேற்றைய ஐகோர்ட்டு உத்தரவில், மருத்துவக் குழு மற்றும் நீதிபதி முன்னிலையில் இன்று ராம்குமாரின் உடல் கூறு பரிசோதனை ராயப்பேட்டை மருத்தவமனையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று அவரது தந்தை புதிய மனு தாக்கல் செய்துள்ளதால் பிரேத பரிசோதனை நாளை நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள்து.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரித்தனர். இதனையடுத்து ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை பிரேத  பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்களும் பெற்றோர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டங்களையும் செய்தனர். இதனிடையே , ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவ குழு முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று நடைபெறுவதாக இருந்த ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனை இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.