சேலஞ்சர்ஸ் டென்னிஸ் – காலிறுதிக்கு முன்னேறினார் தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன்!

ஹாம்பர்க்: ஜெர்மனியில் நடைபெற்றுவரும் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரில், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தமிழ்நாட்டின் ராம்குமார் ராமநாதன்.

ஆண்களுக்காக நடைபெற்றுவரும் இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் ராம்குமார் ராமநாதன் – ஜப்பானின் மோரியா மோதினர்.

இப்போட்டியின் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. ஆனால், இந்த செட்டை இறுதியில் 7-6 என்ற கணக்கில் வென்றார் ராமநாதன். மேலும், இரண்டாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி, போட்டியை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.