பரமக்குடி : திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி

ரமக்குடி

ரமக்குடியை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பரமக்குடியில் வசந்தபுரத்தை சேர்ந்தவர் நஸ்ரியா, திருநங்கையான இவருக்கு 22 வயதாகிறது. இவர் ஆங்கில இலக்கியத்தில் பிஏ பட்டம் பெற்றுளார். சமீபத்தில் இவருக்கு காவல்துறையில் பணி கிடைத்துள்ளது.

இவர் ராமநாதபுரம் ஆயுதப் படை காவலரக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நஸ்ரியா  எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இம்மாவட்டத்தின் முதல் திருநங்கை காவலரான இவரது தற்கொலை முயற்சி கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நஸ்ரியா சக காவல்துறையினரால் தாம் மனரீதியாக துன்புறுத்தப் பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தம்மைப் போன்றவர்களுக்கு காவல்துறையில் சிறிதும் பாதுகாப்பு இல்லாததால் தாம் விரைவில் பணியை ராஜினாமா செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.