டில்லி:

மிழகத்தைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,.  ஊடகம் மற்றும் பத்திரிக்கையில் சிறந்து விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராம்நாத் கோயங்கா விருதை வழங்கி கவுரவித்தார்.

விருது பெற்ற தமிழக பத்திரிகையாளர்கள்

ந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் 2005-ம் ஆண்டு முதல்  சிறந்த ஊடகவியலாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 13வது விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று மாலை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகினார்.

அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் இருந்து 18 பிரிவுகளில் 29 வெற்றியாளர்களுக்கு கோயங்கா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘எமர்ஜென்சி காலகட்டத்தில் ராம்நாத் கோயங்காவின் பணிகளைப் பற்றி கூறுவதானால், இருண்ட காலத்தில் ஒளி விளக்காக இருந்ததாக சொல்ல முடியும்.’ என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், ‘செய்திகளை சென்சேஷனல் ஆக்குவது, அந்தச் செய்தியை அவமதிப்பதற்கு சமம். ராம்நாத் கோயங்கா ஒருபோதும் அதை அனுமதிக்கவில்லை’ என்றும் கூறினார்.

இந்த விருதுக்கு  தமிழகத்தின் சிறந்த ஊடகவியலாளராக குணசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த சூழியல் பத்திரிக்கையாளராக சந்தியா ரவிசங்கரும், சிறந்த புலனாய்வு பத்திரிக்கையாள ராக விஜயகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ராஜ்நாத் சிங் விருது வழங்கி கவுரவித்தார்.