14-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ராம்நாத் கோவிந்த்!

டில்லி,

நாட்டின் 14-வது குடியரசு தலைவராக, ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ராம்நாம் கோவிந்துக்கு  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் கோவிந்த்.

பின்னர்  ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் ராம்நாத் கோவிந்த்.

இதையடுத்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், ராம்நாத் கோவிந்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் சிறப்புரை ஆற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த பெருமைமிகு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுனர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர்  பாரம்பரிய நடைமுறையின் படி, குதிரைப்படை சூழ சாரட் வண்டியில் ராஜ மரியாதை யுடன் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு ராம்நாத் கோவிந்த் அழைத்துச்செல்லப்பட்டார்.

குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவை ஒட்டி டில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.