டில்லி:

பாஜக, தனது கட்சியின் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தை அறிவித்துள்ளது.

“பா.ஜ.க. கட்சியை சிலர் தலித் விரோத கட்சி என்பது போல் சித்தரிக்கிறார்கள். ஆனால் தலித் ஒருவரைத்தான் (ராம்நாத் கோவிந்த்) குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்” என்று பாஜகவினர் தெரிவித்துவருகிறர்கள்.

அதே நேரம், “தலித்தாக இருந்தாலும் ராம்நாத் கோவிந்த், முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறித்திளைத்தவர். சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலை கொண்டவர்” என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.

இதை உறுதிப்படுத்துவது போல, கடந்த 2010ல் ராம்நாத் கோவிந்த் பேசிய தகவல் சமூகவலைதளங்களில் உலவி வருகிறது.

அப்போது ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராம்நாத் கோவிந்த், “இந்தியாவைப் பொறுத்தவரை இசுலாமியரும், கிறித்துவர்களும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவர்கள், எனவே அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை” என்று கூறிய பேச்சுதான் அது.