காந்திநகர்:

இஸ்ரோவின் ஏவுகணைகளை ராமரின் அம்புகளோடு ஒப்பிட்டு குஜராத் முதல்வர் விஜய் ரூபனி பேசினார்.

குஜராத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் இன்பராஸ்ட்ரக்சர் டெக்னாலஜி ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவன பட்டமளிப்பு விழாவில் மாநில முதல்வர் விஜய் ரூபனி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘ ராமாயனத்தில் ராமர் ஏவிய ஒவ்வொரு அம்பும் ஒரு ஏவுகனையாகும். இந்த பணியை தான் இஸ்ரோ தற்போது செய்து வருகிறது. தற்போதுள்ள கட்டமைப்புகள் அனைத்து ராமர் மற்றும் ராமாயனத்துடன் தொடர்புடையதாகும். ராமர் எத்தகைய பொறியாளராக இருந்திருந்திருந்தால் அவர் ராம் சேது பாலம் கட்டி இலங்கையையும், இந்தியாவையும் இணைத்திருப்பார்.

பாலம் கட்டுவதற்கு அணில்கள் உதவி செய்துள்ளது. தற்போதும் அந்த பாலம் கடலுக்கு அடியில் இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். ராம் சேது பாலம் ராமரின் கற்பனையில் தோன்றியது. அதன் பின் தான் தற்காலிக பாலத்தை என்ஜினியர்கள் கட்டியுள்ளனர்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘போரில் லட்சுமணன் மயங்கி விழுந்தவுடன், வடக்கு பகுதியில் அதற்கான மூலிகை இருக்கிறது. அதை எடுத்து வரச் சென்ற ஹனுமன் மூலிகையின் பெயரை மறந்துவிடுவார்.

அதன் பின் அந்த மலையையே தூக்கி கொண்டு வருவார். மலையையே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது எத்தகைய தொழில்நுட்பம். உள்கட்டமைப்பு பணிகளுக்கு இந்த தொழில்நுட்பம் தான் கைகொடுத்தது.

ஆயுதம் மற்றும் உள்கட்டமைப்பு மட்டுமின்றி சமூக பொறியியலிலும் ராமர் ஈடுபட்டுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில அனைத்து ஜாதியினரையும் ஒன்றினைக்கிறோம்.

ஆனால், அப்போதே ஹனுமான் குரங் குகள் படையை ஒன்றிணைத்தார். இது தான் சமூக பொறியியல். இதை தான் ராம் ராஜ்யா என்று மகாத்மா காந்தி பேசினார். இதை நரேந்திரமோடி தற்போது செயல்படுத்தி வருகிறார்’’ என்றார்.