இன்ஸ்டாவில் தன் குழந்தை புகைப்படத்தைப் பகிர்ந்த பிக்பாஸ் ரம்யா….!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ரம்யா நீலக்குயில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சத்யாவை காதலித்து வந்தார். இந்நிலையில் ரம்யாவும், சத்யாவும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணணின் பேத்தி இவர் .400க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் ரம்யா, “கடந்த சில நாட்களாகவே என்னிடம் நிறைய பேர் நீங்கள் ஏன் இவ்வளவு திடீரென உடல் எடை அதிகரித்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்ட இந்த கேள்விக்கு நான் இப்போது பதில் கூறுகிறேன். நான் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளேன் என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதனால்தான் எனது உடல் எடை கூடியது. இனிமேல் எனது உடல் நலத்தை பேணி, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் எடையை குறைக்க போகிறேன்”என்று கூறியுள்ளார்.