தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்….!

90-களில் முன்னணி தெலுங்கு நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன்.

1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

அதுவரை அம்மன் படங்களிலும் நடித்து அசத்தினார்.

கமல்ஹாசனுடன் ‘பஞ்சதந்திரம்’ , ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி தேவி , மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ‘குயின்’ வெப் தொடரிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தனது 50-வயதைத் தொட்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அதை மறைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு தான் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி