கண் முன்பே வந்து போகும் ஜெயலலிதா ; குயின் வெப் தொடர் வெளியானது….!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் கவுதம் மேனன் குயின் என்கிற பெயரில் வெப் தொடராக எடுத்துள்ளார் .

இந்த தொடரை வெளியிட தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் குயின் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறே இல்லை என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.அனிதா சிவகுமரன் எழுதிய குயின் புத்தகத்தை தழுவி தன் தொடர் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கவுதம்

இன்று குயின் வெப் தொடரின் முதல் எபிசோட் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே எம்.எக்ஸ். பிளேயரில் வெளியாகியுள்ளது. என்ன தான் இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறே இல்லை என்று தெரிவித்தாலும் முதல் காட்சியிலேயே அது அப்பட்டமாக தெரிகிறது .

ஜெயலலிதா சிமி கரேவாலின் பேட்டியில் கலந்து கொண்ட காட்சியுடன் குயின் தொடர் துவங்குகிறது. சிறு வயது ஜெயலலிதாவாக அனிகா. மற்றும் அவரின் அம்மாவாக சோனியா அகர்வால் தன் பணியை சிறப்பாக செய்துள்ளனர்

ஏனோ அந்த குயின் தொடரை பார்த்து முடித்தவுடன் மனதில் இனம் தெரியாத ஒரு அமைதி ஏற்படுகிறது. சின்ன வயதிலேயே எத்தனை கஷ்டம், இருந்தாலும் தாங்கியிருக்கிறார் அந்த இரும்பு பெண்.