’தமிழரசன்’ படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா நம்பீசன்…!

பாபு யோகேஸ்வரன் இயக்கும், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார்.இவர்களுடன் சங்கீதா ,சுரேஷ் கோபி, சோனு சூட், ராதாரவி, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கெளசல்யா ராணி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் .ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், தமிழரசன் படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.