சொகுசு கார் வாங்கிய நடிகை ரம்யா பாண்டியன்….!

‘டம்மி டப்பாசு’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

படங்களைத் தாண்டி, சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

பிக்பாங்ஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு அனைவரையும் தன்வசம் ஈர்த்தார் . சிங்க பெண் என அடைமொழியோடு வெளியே வந்தார் .

அடுத்ததாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரம்யா பாண்டியன் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கியிருப்பதாக அவரது சகோதரர் பரசு பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீல நிறத்தில் இருக்கும் அந்த காரின் அருகில் கெத்தாக நின்றபடி ரம்யா போட்டோவுக்கு போஸ் கொடுக்க பிளேட்டில் RPBMW4 என்கிற எண் ஒட்டப்பட்டுள்ளது.