நாடு முழுவதும் இன்று புனித ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் ரமலான் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.  பள்ளிவாசல்களில் விசேஷ தொழுகைகள் நடைபெறுகின்றன.

ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் கடைபிடித்து வந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது..

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து இறைவனை தொழுதனர். இன்று அனைத்து பள்ளிவாசல்களில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இறைவனை தொழுதுவிட்டு தங்களது நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பத்திரிகை.காம் இணையஇதழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.