தமிழ்நாடு முழுதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்  கோலாகலம்

இஸ்லாமியா்களின் புனித நாளான ஈகை திருநாளை (ரம்ஜான்) தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இஸ்லாமியா்களின் புனித நாளான ஈகை திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளன. சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்பட மாநிலம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

காலை முதலே இஸ்லாமியா்கள் புத்தாடைகள் அணிந்து இறைவழிபாடு மேற்கொண்டனா். தொடா்ந்து நண்பா்கள், உறவினா்களை கட்டித் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனா்.

சென்னை திருவல்லிக்கேணி பிரதான சாலையில், ரமலான் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பிரியாணி உள்ளிட்ட உணவு பொருள்களை சமைத்து இஸ்லாமியா்கள்  பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைத்துள்ளனா்.

சேலம், நாமக்கல் பகுதிகளிலும் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்புத்தொழுகை நடந்தது.

மேலும், மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்திலும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு  உள்ளது.