நடிகர் ராணா – மிஹீகா மெஹந்தி விழா….!

ஐதராபாத்: மிஹீகாவின் வீட்டில் நேற்று நடந்த மெஹந்தி விழாவில், நடிகர் ராணாவின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

திருமணத்துக்கு முன் நடக்கும் மெஹந்தி விழா, மீஹீகாவின் வீட்டில் நேற்று மாலை நடந்தது. இதில், நடிகர் ராணாவும் அவர் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

நடிகை சமந்தா, அவர் கணவர் நாக சைதன்யா, நடிகர் வெங்கடேஷ், நாகார்ஜூனா உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை நடிகர் ராணா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.