‘பாகுபலி’ வசூலை மிஞ்சி ஆஸ்திரேலியாவிலும் சாதனை படைத்துள்ளது ‘சஞ்சு’ திரைப்படம்

 இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சஞ்சு திரைப்படம் கடந்த  மாதம் (ஜூலை) முதல் வாரத்தில்  உலகம் முழுவதும் வெளியானது.

ரன்பீர் கபூர் நடித்துள்ள இந்த ‘ சஞ்சு’  திரைப்படம், பாகுபலி இரண்டாம் பாகத்தின் வசூல் சாதனையை தகர்த்து சாதனை படைத்துள்ளது.  இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிலும் சாதனை படைத்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கையை குறித்து எடுக்கப்பட்டது இந்த படம். இந்த படத்தில், சஞ்யத் தத் எந்த தவறும் செய்யாதவர், சந்தர்ப்ப சூழ்நிலைதான் அவரை சிறைக்குச் செல்ல வைத்தது என்று கதையம்சம் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பத்மாவத், ரேஸ் 3 ஆகிய படங்கள் ஒரு வாரத்தில் ஈட்டிய வசூலைக் காட்டிலும், படம் வளியான 3 நாட்களில் 120 கோடி ரூபாய் வசூலித்து சஞ்சு சாதனை படைத்துள்ளது.

பாகுபலி இரண்டாம் பாகத்தின் இந்தி பதிப்பின் ஒருநாள் வசூல் சாதனையையும் முறியடித்தது. தற்போது ஆஸ்திரேலியாவிலும் சஞ்சு சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில்  அதிக வசூலை வாரிக்குவித்த 3வது இந்திபடம் சஞ்சு  என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் வெளியாகி சாதனை படைத்துள்ள இந்த படத்தில் முதலிடத்தை பத்மாவதி பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அமிர்கானின் தங்கல் படமும், தற்போது 3வது இடத்தை சஞ்சவும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சஞ்சு 3வது இடத்தை பிடித்ததன் காரணமாக பாகுபலி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.