ராஞ்சி: 

ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா  இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 451 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடத் தொடங்கிய இந்தியா நேற்று 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் சேர்ந்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம்  தொடர்ந்தது,.

இந்திய இளம்வீரர்களாக  புஜாரா – சஹா இணை சிறப்பாகவும், நிதானமாகவும் விளையாடியது. ஆட்டத்தின் 191.3 வது ஓவரில் புஜாரா இரட்டை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து விருத்திமான் சஹாவும் சதம் அடித்து சிறப்பாக ஆடினார்.

193.2 வது ஓவரில் லயோன் பந்து வீச்சில் புஜாரா மேஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

புஜாரா  525 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரிகள் உதவியுடன் 202 ரன்கள் எடுத்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடித்த 3-வது இரட்டை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இன்னிங்ஸ் மூலம் டெஸ்ட் போட்டியில் 500-க்கும் அதிகமான பந்துகளை எதிர்க்கொண்ட முதல் வீரர் என்ற பெருமையும் புஜாராவுக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன்னால் பாகிஸ்தானுக்கு எதிராக 2004-ஆம் ஆண்டு  முல்தான் டெஸ்ட் போட்டியில் ராகுல் திராவிட் 495 பந்துகளை எதிர் கொண்டிருந்தார்.  புஜாராவின் நிதானமாக ஆட்டம் திராவிட்டை பின்னுக்கு தள்ளியது. திராவிட் சாதனையை முறியடித்து புஜாரா புதிய சாதனை படைத்தார்.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது விக்கெட்டுக்கு இந்த இணை 199 ரன்கள் குவித்தது. உலக சாதனையாகும். இதன் மூலம் 69 வருட சாதனையொன்று முறியடிக்கப்பட்டது.