சிபிராஜ் நடிக்கும் ‘ரங்கா’ படத்தின் புதிய அப்டேட்…!

 

வினோத் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடிக்கும் படம் ‘ரங்கா’ இதில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

சதீஷ், சுஜாதா பாபு உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 28ம் தேதி மாலை 4 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என படக்குழு 🎙தெரிவித்துள்ளது.

முன்னதாக ரஜினிகாந்த, கடந்த 1982ம் ஆண்டு ‘ரங்கா’ என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.