‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே….!

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார் ஜிப்ரான்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்களைத் தவிர்த்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அவர் நடித்துள்ளார்.

இது தொடர்பாக ரங்கராஜ் பாண்டே “ஜிப்ரானிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரின் நடிப்பை நான் தனிப்பட்ட முறையில் பார்த்தேன். எல்லாப் பெருமைகளும் பெ.விருமாண்டியையும் தயாரிப்பாளரையுமே சேரும்” என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/kjr_studios/status/1259446924970618880

இதற்கு கே.ஜே.ஆர் ராஜேஷ் “ரங்கராஜ் பாண்டே…உங்களது கதாபாத்திரமும் தனித்து நிற்கும் என்று உறுதியாகச் சொல்வேன். நம் அத்தனை பேரின் முயற்சியையும் மக்கள் பார்க்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்