உண்மை கதையை மையமாக கொண்ட ‘ரேஞ்சர்’ பர்ஸ்ட் லுக்…!

தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வரும் இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் டைட்டில் ‘ரேஞ்சர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த போஸ்டரில் ஒரு புலி நடந்து வருவது போலவும் இந்தப்பக்கம் துப்பாக்கியை மறைத்து வைத்து சிபிராஜ் நிற்பது போலவும் உள்ளது. கீழே ‘இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது’ என எழுதப்பட்ட வாசகம் உள்ளது.