‘ராங்கி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சத்யா இசையமைக்கிறார். இதன் பூஜை, கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று (மே 22) இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டு போலீஸாரால் த்ரிஷா கைது செய்யப்படுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.