மும்பையில் உள்ள இந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் இல்லம் அண்மையில் மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் “கங்கனாவின் வீட்டை இடித்தது சட்ட விரோதம்” என தீர்ப்பளித்துள்ளது.

கங்கனா இல்லம் இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி, அப்போது நடிகைகள் டாப்சி பன்னுவும், ஸ்வரா பாஸ்கரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஸ்வரா – டாப்சி

இப்போது கங்கனாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவரது சகோதரி ரங்கோலி சாண்டெல், அந்த இரு நடிகைகளையும் வறுத்தெடுத்துள்ளார்.

இது குறித்து ரங்கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஒரு விஷயத்தை என்னால் சும்மா விட்டு விட முடியாது. மும்பையில் உள்ள எனது சகோதரி கங்கனா வீடு இடிக்கப்பட்ட போது டாப்சியும், ஸ்வராவும் எள்ளி நகையாடினர். ‘வீட்டை இடித்தது சரிதான்’, என்று சொன்னார்கள். இப்போது எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. எனவே டாப்சி மீதும் ஸ்வரா மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தேன். ஆனால் கங்கனா ‘அதெல்லாம் வேண்டாம்'” என கூறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

“டாப்சி, ஸ்வ்ரா போன்ற ‘பி- கிரேடு’ நடிகைகளை, பொறாமை பிடித்தவர்களை, பொதுமக்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். கங்கனா குறித்து அவர்கள் ஏதாவது சொன்னால் அதனை நம்ப வேண்டாம்” என்றும் கங்கனாவின் சகோதரி ரங்கோலி, தனது இன்ஸ்டாகிராமில் வெடித்துள்ளார்.

– பா. பாரதி