டில்லியில் சோனியாவை சந்தித்தார் ரனில் விக்ரமசிங்கே!

 டில்லி:

ந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார்.

உத்தரபிரதேசசட்டசபை தேர்தலை முன்னிட்டு,  வாராணாசியில்   தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அன்றைய தினமே திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

sonia-sl-pm-759

இதனால், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலம் தேறிய பின்னரும்  சோனியா காந்தி கடந்த  இரு மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள  இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே டெல்லியில் சோனியா காந்தியை  இன்று சந்தித்து பேசினார். சோனியாவின் நலம் விசாரித்தார்.

அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed