சென்னை:

மிழகத்தின் 35, 36வது மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் உதயமாகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய மாவட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே  32 மாவட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், மேலும்  5 புதிய மாவட்டங்கள் உதயமாவதாக தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி கடந்த சட்டமன்ற தொடரின்போது குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்,  புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு கடநத் 13ந்தேதி வெளியிட்டது.

இந்த நிலையில், சமீபத்தில், தென்காசி,  கள்ளக்குறிச்சி என இரு புதிய மாவட்டங்கள் உருவான நிலையில், வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து,  இன்று  ராணிப்பேட்டையும் திருப்பத்தூரும் புதிய மாவட்டங்களாக உதயமாகின்றன.

தமிழகத்தின் 35 ஆவது மாவட்டமான திருப்பத்தூரிலும், 36 ஆவது மாவட்டமான ராணிப்பேட்டையிலும் இன்று நிர்வாக பணிகளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.