கடன் சுமை: ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் ரஞ்சன் மத்தாய் ராஜினாமா

மும்பை:

பிரபல விமான நிறுவனமான ஜெட்ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைவர், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.

அதிகரித்து வரும் கடன் சுமையை சமாளிக்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்ய ஜெட்ஏர்வேஸ் இய்ககுனர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸ்ஸின் மேலாண்மை வாரியத்தின் இயக்குநராக இருந்து வரும்,  ரஞ்சன் மத்தாய்,  என் கடமைகளை செய்ய முடியவில்லை. அதனால் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன் என்று கூறி உள்ளார்.

தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ், நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக  விமானிகள், பொறியாளர்கள் மற்றும் மூத்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் திணறி வருவதாகவும், இதனால் பலர் பணியில் இருந்து விலகி வேறு நிறுவனங்ளில் பணிக்கு  சென்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, விமான ஊழியர்களுக்கு ஜெர் ஏர்வேஸ் விமான நிறுவனம் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என்ற பிரச்சினை காரணமாக  விமாங்களை இயக்க விமானிகள் முன்வராததால், பல உள்நாட்டு சேவைகைளை ஜெட் ஏர்வேஸ் ரத்து செய்திருந்தது.

இங்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் ரஞ்சன் மத்தாய் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிறுவனக் கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள சிக்கல் காரணாமாக ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உயர்ந்து வரும் எரிபொருளின் விலையினாலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகவும் தடுமாறி வருகிறது. இதற்கிடையில் ஜெட் ஏர்வேசை வாங்க டாட்டா சன்ஸ் லிமிடெட் நிறுவனமும் முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ்ஸின் மேலாண்மை வாரியத்தின் இயக்குநர் ரஞ்சன் மத்தாய் ராஜினாமா செய்துள்ளார்.