வேளாண் பட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 7ந்தேதி கலந்தாய்வு தொடக்கம்

சென்னை:

மிழகத்தில் வேளாண் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியல் வெளி யிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7ந்தேதி கலந்தாய்வு தொடங்க இருப்பதாகவும் மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

கோவையில் உள்ள  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் அதன்கீழ் செயல்பட்டு வரும் உறுப்பு  கல்லூரிகளிலும் வேளாண்மை  இளநிலைப் பட்டப்படிப்புக்கு கடந்த மே மாதம்  18ந்தேதி  முதல் ஜூன் 17ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வேளாண் படிப்புக்கு  மொத்தமுள்ள 3,422 இடங்களுக்கு  48,676 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ராமசாமி இன்று கோவையில் வெளியிட்டார்.

இந்த பட்டியலில்,  திண்டுக்கல் மாணவி ஆர்த்தி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஈரோடு அருகே உள்ள  கொடுமுடி மாணவி ஸ்ரீகார்த்திகா இரண்டாமிடமும், கோவை மாணவி மேனகா மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) 7ந்தேதி கலந்தாய்வு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 7ஆம் நாள் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், ஜூலை 9ந்தேதி முதல் 13ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான முதற்கட்டக் கலந்தாய்வும், 2வது கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறும் என்றும்   துணைவேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்கள்  கீழே உள்ள லிங்கில் தெரிந்துகொள்ளலாம்…

http://www.tnau.ac.in/index.html