பொறியியல் படிப்புக்கு வரும் 28ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு: அண்ணா பல்கலை

சென்னை:

ண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில்  பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தர வரிசை பட்டியல்  வரும் 28ந் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

28ம் தேதி காலை 8.30 மணிக்கு தர வரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணைய தளததில்  வெளியிடப்படும் என்றும்,  பி.இ. படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 6-ம் தேதி தொடங்கு;ம என்று கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் முதன்முதலாக  இந்த ஆண்டு  பொறியியல் படிப்பு கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்துகிறது. இந்த பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்  ஏற்கனவே  ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து  சான்றிதழ் சரிபார்க்கும் பணி, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில்  கடந்த 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்று நிறைவடைந்தது.

இந்த நிலையில் பொறியியல் படிப்புக்கு   தகுதியுள்ள மாணவர்களை கொண்ட தரவரிசைப்பட்டி யல் வரும் 28ம் தேதி காலை 8:30 மணிக்கு வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து தரவரிசைப் பட்டியலை வெளியிட இருப்பதாகவும், தரவரிசை குறித்த விவரங்கள் அன்றே மாணவர்களின் மொபைல் போன் மற்றும் இமெயில் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து ஜூலை 6ந்தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.