99 நாடுகளின் இன்டர்நெட்டை முடக்கிய சைபர் கிரிமினல்கள்

வாஷிங்டன்:

ரான்சம்வேர் என்ற வைரஸ் நேற்று இந்தியா உள்ளிட்ட 99 நாடுகளின் இணையதளத்தை தாக்கியுள்ளது. சரியாக 57 ஆயிரம் இடங்களில் தாக்குதல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன், தைவான் உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் இங்கிலாந்து மருத்துவமனைகள், ஸ்பானிஷ் தொலைதொடர்பு நிறுவனங்கள் அதிகளவில் பாதித்துள்ளது.

இந்த வைரஸ்ன் முதல் பிரதி கடந்த பிப்ரவரியில் கண்டறியப்பட்டது. இது 28 விதமான மொழிகளில் உள்ளது. நேற்று காலை 10 மணி முதல் இதன் தாக்குதல் அதி தீவிரமாக இருந்தது. இந்த வைரஸ் கணினி உள்ளே புகுந்தவுடன் ஒரிஜினல் பைல்களின் பெயர்களை மாற்றி சேதப்படுத்தியது.

உள்ளே புகுந்து சில பைல்களையும் அழித்துள்ளது. தாக்குதலை நடத்திவிட்டு வெளியேற அந்த வைரஸ் 300 டாலர்கள் கேட்டது. இதன் பின்னால் சைபர் கிரைம் கிரிமினல்கள் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரான்சம்வேர் என்ற இந்த வைரஸ் தாக்குதல் மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது. தொழில்கள், வாடிக்கையாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இந்த வைரஸ் புகுந்தால் நோயாளிகளின் உயிர் கேள்விகுறியாகிவிடும்.

இந்த வைரஸ் சில தொழில்நுட்பம் மூலம் அனைத்து கம்ப்யூட்டர்களுக்கும் பரவுகிறது. இணையதளங்களை முடக்கும் கும்பல் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.