70 ஆண்டுகள் என்ன செய்துவிட்டோம் என்று கேட்கும் பாஜக, 5 ஆண்டுகள் என்ன செய்துவிட்டது? : பிரியங்கா காந்தி கேள்வி

பாதோகி:

70 ஆண்டுகள் காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை என்று பழைய பாட்டையே பாடிக் கொண்டிருக்கும் பாஜக, கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தது? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


கிழக்கு உத்திரப் பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரியங்கா காந்தி, தீவிர சுற்றுப் பயணம் செய்துவருகிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, ஆட்சியின் சாதனைகளை உத்திரப்பிரதேச பாஜக அரசு வெளியிட்டுள்ளது. இது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.
ஆனால் எதார்த்தம் வேறாக உள்ளது. இந்த ஆட்சியால் அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எதற்கெடுத்தாலும், 70 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று திரும்ப திரும்ப கேட்கிறார்கள். இந்த கேள்வி எல்லாம் காலாவதியாகிவிட்டது. கடந்த 5 ஆட்சியில் பாஜகவினர் என்ன செய்துவிட்டீர்கள் என்றார்.