இத்தாலியில் ரன்வீர் கபூர் – தீபிகா படுகோனே திருமணம் ?

ஹிந்தி திரைப்பட நடிகர்களான ரன்வீர் கபூர் மற்றும் தீபிகா படுகோனே நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் சேர்ந்த நடித்த பாஜ்ராவ் மஸ்தானி, கோலியோகி லீலா, ராஸ்லீலா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெளிவந்த பத்மாவதி திரைப்படத்தில் ரன்வீன்கபூர் அலாவுதீன் கில்ஜியாகவும், பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்தனர். திரைக்கு முன்பும், திரைக்கு பின்பும் சரி இருவரும் அழகான அன்பு நிறைந்த ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டனர்.
ranveer
இந்நிலையில் இவர்களின் இண்டகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இருவரின் திருணமனத்தை குறிக்கும் விதமாக உள்ளது. ரன்வீன் கபூர் மற்றும் தீபிகா படுகோனே திருமணம் நவம்பர் 12ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை நடைபெறும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரன்வீர்கபூர் மற்றும் தீபிகா படுகோனே தங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சில நாட்களுக்கு பிசியான நாட்களை ஒதுக்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். திருமணத்திற்கு முன்பாக ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களை முடிக்கவும் இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களது திருமணத்தை சிறிய விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர் என்று செய்தித்துறை வட்டாரங்கள் கூறுகிறது. இத்தாலியில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு ஒரு சிலர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் ஹிந்தி திரைப்பட நடிகர்களான அர்ஜூன் கபூர், ஷாரூக்கான் உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்தாலியில் திருமணம் முடிந்த நிலையில் மும்பையில் வரவேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ரன்வீர்கபூர் நடித்து வரும் சிம்பா திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் மூடப்படும் என்றும், தீபிகா படுகோனே சில திரைப்படங்களின் கதையை கேட்டு வருவதாகவும் ஆனால் எந்த படத்திற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.