கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.

கமல்ஹாசன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிஸியாக இருப்பதால் தேர்தல் முடிந்தவுடன் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் 50-வது படத்தை ஷங்கர் இயக்க ராம் சரண் நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கரை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் ராம் சரண் உடன் இணைந்து நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேவேளையில் ரன்வீர் சிங் நடிப்பில் ஷங்கர் புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்பதில் ரன்வீர் சிங் முனைப்புடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.