ரன்வீர் சிங் – ’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்…!

1983ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை பற்றி உருவாகும் படம் ‘83’ . இதில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார்.

கபில் தேவின் மனைவி ரோமி பாடியா கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன்நடிக்கிறார். பஜ்ரங்கி பைஜான் என்கிற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய கபீர் கான் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இந்நிலையில் ரன்வீர் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் அவருடைய கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. கிட்டத்தட்ட கபில் தேவ் தோற்றத்தை ரன்வீர் சிங் பெற்றிருக்கிறார் என்று சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டுக்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி